நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த 2012 ஆம் வருடம் protection of children from sexual offence act 2012 எனப்படும் போக்சோ சட்டத்தை கடந்த 2012 ஆம் வருடம் நிறைவேற்றியது.
அதாவது, கடந்த 2012 ஆம் வருடம் தலைநகர டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி நள்ளிரவில் பேருந்தில் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். அதன் பிறகு நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கொந்தளிப்பின் காரணமாக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த சட்டப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு உச்ச நீதிமன்ற முறையில் சென்றால் கூட முன் ஜாமின் கிடைக்காத வகையில், இந்த சட்டம் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் ,அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவரை கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்ததால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியிடம் மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தியபோது பாதிக்கப்பட்ட சிறுமி அதே பகுதியை சார்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட 4️ பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவர சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை மகளிர் காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கடந்த 8ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய கடலோர காவல் படை காவலர் ஒருவரை அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.