fbpx

இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களா….? சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை….!

பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர்.

அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் அந்த தவறுக்கு முழுக்க, முழுக்க குற்றவாளியை மட்டுமே காரணம் கூற முடியாது.

ஆனால் எந்தவித பழக்கமும் இல்லாத சாதாரண மனிதர்கள் இது போன்ற தவறுகளில் ஈடுபட்டால் அவர்கள் வெறும் குற்றவாளிகள் மட்டும் தான் என சொல்வதில் நியாயம் இல்லை. குற்றவாளி என்ற வார்த்தையையும் தாண்டி அவர்கள் செய்த இதுபோன்ற இழிவான செயலுக்கு விளக்கம் அளிப்பதற்கான வார்த்தைகளே இல்லை.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுறத்தை சேர்ந்தவர் தேனையா(50) இவர் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தங்கி பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவர் தன்னுடைய குடும்பத்தை பிரிந்த நிலையில் மற்றொரு திருமணத்தை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில், தேனையாவின் 17 வயது மகள் தன்னுடைய தந்தையை காண்பதற்காக கடந்த 2011ஆம் வருடம் திருநெல்வேலி சென்றார். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை தேனையா அந்த இளம் பெண்ணை மீண்டும் வால்பாறைக்கு அழைத்து வந்து விடுவதாக தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் தன்னுடைய மகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்து இருக்கிறார் மேலும் மயக்கத்தில் இருந்த தன்னுடைய மகளையே பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

அதன் பிறகு திருநெல்வேலிக்கே தன்னுடைய மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் தேனைய்யா. அதன் பிறகு அவரிடம் இருந்து தப்பித்த அந்த 17 வயது இளம்பெண் திருநெல்வேலியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் வருடம் இது தொடர்பாக புகார் வழங்கினார்.

திருநெல்வேலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்த சம்பவம் வால்பாறையில் நடைபெற்றதால் அதன் பிறகு இந்த வழக்கு வால்பாறைக்கு மாற்றப்பட்டு கடந்த 2018 ஆம் வருடம் முதல் கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இதற்கு நடுவே கடந்த 2020 ஆம் வருடம் ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த தேனையா திடீரென்று தலை மறைவானார். அதன் பிறகு அவரை வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் 6 மாதங்களுக்கு முன்னர் மறுபடியும் கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஆர் நந்தினி தேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் தேனையாவிற்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜராகி வாதாடினார்.

Next Post

இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டிய சிறை காப்பாளர்கள் அதிரடி கைது…!

Fri Jan 13 , 2023
தற்போது சமூகத்தில் தவறு நடப்பது என்பது சகஜமான விஷயம் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. ஆனால் அந்த தவறு செய்பவர்கள் யார்? என்று பார்த்தால் சற்றே நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களே தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் சென்ற 2️ நாட்களுக்கு முன்னர் இரவு சுமார் 11 மணியளவில் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like