fbpx

தாலி கட்டிய கணவரே தவறான உறவுக்கு அழைத்த அவலம்…..! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு…..!

கோயம்புத்தூரை சார்ந்த 25 வயது பட்டதாரி பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்க்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனமாக பெண் வீட்டில் 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சொல்லிட்டவற்றை சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்து இருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் மீண்டும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார்கள். அதோடு, அந்த மாப்பிள்ளைக்கு கஞ்சா பழக்கம் இருப்பதும், வயாகரா இல்லாமல் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது என்பதும் தெரிய வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்ற இடத்தில் அந்த இளம் பெண் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது கணவர் நிர்வாணமாக, அவரை படம் எடுத்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் மேலே ஒரு துணியை சுற்றிக்கொண்டு வெளியே ஓடி வந்தார்.

ஆனால் இதனை கண்ட மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்துச் சென்று கணவரின் அறையில் தள்ளி விட்டார்கள். மேலும் ஆபாசமான வீடியோவை காட்டி இயற்கைக்கு மாறான முறையில் அவர் அந்த பெண்ணை உறவு கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் பீளமேடு அருகே இருக்கின்ற நண்பரின் ஷெட்டுக்கு தன்னுடைய மனைவியை அந்த நபர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தன்னுடைய கைபேசியில் இருந்த ஆபாச வீடியோ ஒன்றை காட்டி இதே போல 3 பேருடன் சேர்ந்து உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த இளம் பெண் ஒரு வழியாக அங்கிருந்து தப்பிச் சென்று தன்னுடைய தாயார் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் மகிளா நீதிமன்றத்தில் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு, 3️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது சென்ற வருடம் புகார் வழங்கப்பட்டும் காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த இளம் பெண் புகார் கூறியிருக்கிறார்.

இது குறித்து கோவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் போது பாதிக்கப்பட்ட இளம் பெண் விசாரணை அதிகாரி தொடர்பாக புகார் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த பெண் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமனம் செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவருடைய கணவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோ,ம் கைது செய்தவுடன் அவரிடம் இருக்கும் நிர்வாண படங்களை அழித்து விடுகிறோம் என்று தெரிவித்திருக்கிறோம்.

அந்த பெண் குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட 3 பேர் செல்போன் சிக்னல்களும் வெவ்வேறு இடத்தில் உள்ளதாக காணப்பட்டுள்ளது. ஆதாரங்கள் எதிராக இருந்ததால் காவல்துறையினர் அடுத்த நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை அந்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்று இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு எதிராக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டிஸ் வெளியிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்….! தலைமறைவான நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறை…..!

Sun Mar 5 , 2023
தற்போதயெல்லாம் படித்து டாக்டர் பட்டம் வாங்குவதைவிட கொடுக்க வேண்டிய இடத்தில் பணம் காசை கொடுத்து கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்கி வைத்துக் கொள்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பல அரசியல் கட்சி தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது இதில் வேறு விதமான மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித […]
”இப்படி அவமானப்படுத்திட்டீங்களே”..!! போலி டாக்டர் பட்டம்..!! செம கோபத்தில் நடிகர் வடிவேலு..!!

You May Like