மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள்.
அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி இரவு சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு வந்த ஒரு நபர் சுரேஷ் மீது டீசலை ஊற்றி தீ வைத்து சென்று விட்டார்.
இந்த சம்பவத்தால் உடல் முழுவதும் கருகிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுரேஷ் அங்கே சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். சிங்காநல்லூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் ஊத்தங்கரை நொச்சிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (53) என்ற விவரம் தெரியவந்தது.
காவல்துறை நவீன் விசாரணையில் சுப்பிரமணியம் உயிரிழந்த சுரேஷும் நண்பர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சம்பவம் நடைபெற்ற இன்றைய தினம் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது. அதன் பிறகு சுரேஷ் உறங்கிக் கொண்டிருந்த போது சுப்பிரமணி பெட்ரோல் பங்கில் இருந்து எரிபொருளை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அதோடு, பாட்டிலில் டீசல் விற்பனை செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பீளமேடு லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (62) சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த பாலகிருஷ்ணன்( 59) உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்