கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி( 35) என்ற நபர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தரகராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (30) இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இத்தகைய நிலையில், கடந்த 4️ மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டி அதில் இருவரும் வசித்து வந்தனர். ஆனால் கடந்த 3 தினங்களாக அய்யாசாமியின் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில், அவருடைய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தொண்டாமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது வீட்டின் அறையில் இருவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொண்டாமுத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் விசாரணையில் ஐயாசாமிக்கு 2.5 கோடி அளவில் கடன் இருந்ததாகவும் சமீபத்தில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே கடன் சுமையின் காரணமாக தம்பதிகள் இருவரும் இந்த விபரீத மனதை மேற்கொண்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.