தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிவலிங்கத்தை பற்றி தவறாக கருத்து கூறிய ஒருவருக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமராவதி நகரில் மருந்து கடைக்காரர் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கன்னையா லால் படுகொலை சம்பவம் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்ட, தெற்கு மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. சமீபத்தில் இவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து, பெற்றோர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.