fbpx

கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி…..! போராட்டத்தில் குதித்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்….!

ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி அளவில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிமிடம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

அந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்திருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது இத்தகைய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமான கொண்டாட்டத்தை தொடர்ந்து உள்ளனர்.

இதற்கு நடுவே ஜெயநகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி என்று வேட்பாளர் சௌமியா ரெட்டி மற்றும் பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர் சி கே ராமமூர்த்தி உள்ளிட்டோர் இடையே கடுமையான போட்டியில் நிலவி வந்தது பாஜகவின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

வாக்கு என்னும் மையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் போராட்டத்தில் இறங்கினார். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு உண்டானது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் சி கே ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Next Post

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாப பலி…..! ஆபத்தான நிலையில் 8க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை…!

Sun May 14 , 2023
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கலாச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கு நடுவே காவல்துறையினர் கிராமப்புறங்களில் நடத்திய விசாரணையில், எக்கியார்குப்பம் […]

You May Like