இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இன்று தமிழக முழுவதும் 1000 அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை என்று தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் நேற்று இரவு முதல் கூட்டத்தில் தத்தளிக்கிறது. தமிழக அரசின் சார்பாக ஆயிரம் சிறப்பு தேடும் பதில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது ஆனாலும் அதிக அளவு ஆபத்து இருப்பதால் பலர் ஆன்மீக பேருந்துகளில் செல்ல தயாராகி விட்டார்கள்.
இந்த சூழ்நிலை தான் சுமார் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆம்னி பேருந்து பயணச்சீட்டு விலை தற்போது 1500 ரூபாயாக அதிகரித்து உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் தற்போது அதிகரித்திருப்பது பயணிகளிடையே அதுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே தற்போது விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு இது தொடர்பாக அதிகாரிகள் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் பயணிகள்.