தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து இருக்கின்ற நிலையில், சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது மறுபடியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
நேற்று முன்தினம் சுமார் 39 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.