வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை தினங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் இடம் தான் கடற்கரை.
ஆனால் இந்த கடற்கரையானது காதலர்களுக்கு சந்தித்து பேசும் ஒரு வழக்கமான இடமாகவே மாறிவிட்டது. கடற்கரை பகுதிகளுக்கு காதலர்கள் வந்துவிட்டால் போதும் வீட்டில் எப்படி இருந்தாலும் இந்த கடற்கரைக்கு வந்து விட்டால் அவர்கள் சுதந்திரப் பறவையாக மாறிவிடுவார்கள். யார் எங்கிருந்து பார்ப்பார்கள், நம்மை என்ன செய்வார்களோ என்ற எந்தவிதமான பயமும் இன்றி காதலர்கள் இந்த கடற்கரையில் அமர்ந்திருப்பார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ஒருவர் மீது ஒருவர் சாய்வதும், ஒருவர் மடியில் ஒருவர் படுத்திருப்பதும் போன்ற நிகழ்வுகள் இந்த கடற்கரையில் தான் எந்த விதமான பயமும் இல்லாமல் நடைபெறும்.அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் 25 வயதான இளைஞர் நேற்று முன்தினம் சுமார் 8 மணியளவில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் இருக்கின்ற கடற்கரையில் தன்னுடைய காதலியுடன் இருள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இருவர் மட்டும் இருள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்திருந்ததை கவனித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த கைப்பையை பரிசோதித்திருக்கிறார்கள்.
அந்த கைப்பையில் பணம் எதுவும் இல்லாததன் காரணமாக, அவர்களுடைய கைபேசியை பிடுங்கி இணையதளம் மூலமாக பண பரிவர்த்தனையை செய்திருக்கிறார்கள். அதில் பரிசோதனை செய்து வங்கி கணக்கில் பணமிருந்ததை தெரிந்து கொண்ட அந்த மர்ம கும்பல், அவர்களிடமிருந்து 40,000 ரூபாயை போன் பே மூலமாக இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் காதலர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் தனிமையில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தனிமையில் இருக்கும் காதலர்களிடம் இது போன்ற கத்தி முனையில் பணம் பறிக்கும் செயல் அதிகளவில் இந்த பகுதியில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட முகமது உசேன், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் மனு என்பதை வழங்கி இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களின் வங்கி கணக்கை தீவிரமாக தேடி வருகிறார்கள். அத்துடன் நீலாங்கரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து காதலர்களிடம் இணையதளத்தின் மூலமாக கத்தி முனையில் பணம் பறித்த 3 நபர்களை தேடி வருகிறார்கள்.