fbpx

மீனவர்களே அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழக மக்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்காது என்பது தான் தற்போது வரையில் நாம் பார்த்திருக்கும் வரலாற்றுச் சான்றிதழ். ஆனால் அதிமுக ஆட்சி காலம் வந்துவிட்டால் தமிழகம் முழுவதும் பருவம் தவறாமல் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை மாநில அரசு எப்படியாவது சரி செய்து விடும்.

ஆனால் முதல் முறையாக திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் மழை இருக்காது என்ற வரலாற்றுக் கருத்தை உடைத்து எறிந்து இருக்கிறது தற்போதைய இந்த வடகிழக்கு பருவமழை காலம்.

ஆனால் இந்த மழையின் காரணமாக, காலம் காலமாக இருந்த பழமொழி மாறி இருக்கிறது என்று சொன்னாலும், தற்போது தமிழக மக்கள் வேறு விதமாக பேசிக் கொள்கிறார்கள். அதாவது முன்பெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பெய்யாது அதனால் மக்கள் துன்பப்படுவார்கள், தற்போது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழை பொழிகிறது ஆனால் மழை பொழிவின் மூலமாக மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற பேச்சு பரவலாக தமிழக மக்களிடையே காணப்படுகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 2 தினங்களில் இலங்கையை நோக்கி நகரலாம். ஆகவே தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.தெற்கு வங்ககடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை கடற்கரையை நோக்கி மெல்ல, மெல்ல நகரலாம்.

ஆகவே இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல வரும் 23ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸில் இருந்து 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம். குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

அதேபோல இன்று தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதேபோல இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது
.

மேலும் நாளையும், நாளை மறுநாளும் குமரிக் கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல், 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசகூடும் என்று கூறப்படுகிறது.

அதேபோல வரும் 23ஆம் தேதி மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல், 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Next Post

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈஸியா இதை செய்யலாம்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Tue Dec 20 , 2022
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது. பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் […]
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈஸியா இதை செய்யலாம்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

You May Like