தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதி ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் தலை நசுக்கப்பட்டு பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. இந்த நிலையில் மனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பெயரில் சடலம் கடந்த இடத்திற்கு வந்த ஏரியூர் காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
உயிரிழந்தது யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்ற பல கோணத்தில் ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன இந்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.