fbpx

சொத்தால் வந்த வினை பெண் படுகொலை! திமுக பிரமுகரின் மகன் அதிரடி கைது!

முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள்.

அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆனால் குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கிடையில் எப்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்ததோ, அப்போதே கூட்டுக் குடும்பத்தின் பலம் என்பது முற்றிலுமாக சிதைந்து போனது.

அந்த வகையில் திருவள்ளூர் பெரியபாளையம் அருகே சொத்து தகராறு பெண் கொலை செய்யப்பட்டது. குறித்து அவருடைய உறவினரான திமுகவின் ஒன்றிய செயலாளர் மகனை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். பெரியபாளையம் அருகே இருக்கின்ற கன்னிகைபேர் பகுதியை சேர்ந்தவர் தான் திராவிட பாலு.

ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகரான திராவிட பாலுவின் தம்பி சக்திவேல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும், இவருடைய அண்ணனான திராவிட பாலுவின் குடும்பத்திற்கும் இடையே சொத்து குறித்து பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. இது குறித்து இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதில் சக்திவேலின் மகனான விஷால் திராவிட பாலுவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, அவருடைய மனைவி செல்வி, மகன் முருகன், மனைவி ரம்யா, அவருடைய மகன் கருணாநிதி உள்ளிட்டோரை இரும்பு கம்பியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரம்யா உள்ளிட்ட நால்வரும் மஞ்சங்காரணையில் இருக்கின்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ரம்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நேற்று விஷாலை கைது செய்திருக்கின்றனர்.

Next Post

மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Tue Jan 3 , 2023
ஒரு பெண் கல்வி கற்பதால்தான் நாடு மிக விரைவில் முன்னேறும் என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்கள், அது உண்மையும் கூட. ஆகவே தான் பெண் கல்வியை பாதுகாக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பெண்களும் கல்வி கற்பதில் சாதனை படைத்து வருகின்றனர். என்றளவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வில் முதலிடம் பிடிப்பதில் பெண்களே சிறந்து […]

You May Like