சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை என்று பல விஷயங்களை பற்றி பேசும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த தொடர் அமைந்திருக்கிறது.
திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பின்னர் இந்த தொடர் மூலமாக மக்கள் மனதை பெரிய அளவில் கொள்ளை அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரின் அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்ன திருப்பங்கள் வரப்போகிறது? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இவர் இதற்கு முன்னர் பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2012 ஆம் வருடம் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் இருவரும் பிரச்சனையின் காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்கள். தற்சமயம் ஹரிப்பிரியாவின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.