தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன் பேட்டையைச் சேர்ந்தவர் தங்க அண்ணாமலை (55) இவர் முன்னாள் திமுக ஒன்றிய உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. இவருடைய வீட்டின் அருகே போடப்பட்டிருந்த வேலையை கடந்த 16ஆம் தேதி இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சபாபதி (52) மற்றும் அவருடைய மனைவி ராதா (46)உள்ளிட்டோர் சேதப்படுத்தி தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பிய போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அவரை கற்களால் அடித்திருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலையை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை வழங்கியும் பலன் இல்லாமல் கடந்த 17ஆம் தேதி இரவு அவர் உயரிழந்தார்.
ஆகவே பாபநாசம் காவல்துறையினர் கணவன், மனைவி உள்ளிட்ட இருவரையும் கொலை வழக்கு பதிவு செய்து, கடந்த 18ஆம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளது