fbpx

மார்டன் வழிப்பறி…! கூகுள் பே மூலமாக வடமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த ஐவர் கைது…!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டாலும், அந்த நடவடிக்கைகள் எதுவும் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சுதீர் (29) இவர் வேலை தேடி அவருடைய நண்பரின் உதவியுடன் ஈரோட்டிற்கு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் இருக்கின்ற தன்னுடைய நண்பர் திலீப்புடன் தங்கி இருந்து கொண்டு வேலை தேடி இருக்கிறார்.

அந்த சமயத்தில் இவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளார்.

அவரை நம்பி சுதீர் மற்றும் திலீப் உள்ளிட்ட இருவரும் சென்று உள்ளனர். இந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர் அங்கிருந்த மேலும் சிலருடன் சேர்ந்து சுதிரையும், திலீப்பையும் மிரட்டி இருவரும் வைத்திருந்த ரொக்க பணம் 5200 பறித்துள்ளனர். அதோடு செல்போனை பறித்த அந்த கும்பல் கூகுள் பே இருப்பதை பார்த்து அதன் மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2 பேரிடமும் பணம் இல்லாத நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை பெற்று அதனை அந்த கும்பலிடம் வழங்கி உள்ளனர். அதன் பிறகு இருவரையும் தங்களுடைய வேனில் அழைத்துச் சென்று ஒரு காட்டுப் பகுதியில் இறக்கி விட்டு விட்டு வழிப்பறி கும்பல் தப்பி சென்றது.

இதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய இருவரும், அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் காவல் நிலையத்திற்கு வந்து நடந்தது தொடர்பாக புகார் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்து சென்ற வீரப்பன்சத்திரம் பெரிய வலசு பகுதியைச் சார்ந்த கார்த்திக், திருச்செங்கோட்டை சேர்ந்த பூபதி, பிரவீன், நாராயண வலசை பகுதியைச் சார்ந்த லிங்கேஷ் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கின்ற சோமசுந்தரம் என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

Tue Jan 17 , 2023
ஓபிஎஸ் வேண்டுமென்றால் சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சியாக செயல்படலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆர் திரை உலகிலும், அரசியலிலும் ஜாம்பவானாக திகழ்ந்தார். திமுகவை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். குடும்ப ஆட்சியை எதிர்த்தவர். எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க இருப்பதாக கூறிய கருத்து தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சசிகலா தொடர்பாக கருத்து தெரிவிக்க […]
’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

You May Like