சமயபுரம் அருகே தாளாக்குடி அம்மன் நகரை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பத்மப்பிரியா(36). இந்த நிலையில், சண்முகவேல், பத்மபிரியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பேஷன் டிசைனர் ஆன பத்மப்பிரியா திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான் பத்மப்ரியாவிற்கு தொழிலில் வளர்த்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரும் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய பல்வேறு விதத்தில் முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் நஷ்டத்தை அவரால் ஈடு செய்ய முடியவில்லை. தொழில் நஷ்டத்தில் ஓடுவதால் பத்மபிரியா மன துயரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பத்மபிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.இது தொடர்பாக தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பத்மபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தொழிலில் உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.