fbpx

தூத்துக்குடியில் நீரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி…..! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டம் சிவலார்பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) ஆகியோர் மற்றும் சுதன் த/பெ.கார்திக்கேயன் உள்ளிட்டோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் விழுந்து மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த செய்தியை கேள்வி ஏற்று மிகுந்த வேதனை அடைந்தேன் இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Next Post

கர்நாடக சட்டமன்ற தேர்தல்..!! மாலை 4 மணி நிலவரப்படி 86 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி..!!

Sat May 13 , 2023
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 86 தொகுதிகளில் வெற்றி மற்றும் 50 தொகுதிகளில் முன்னிலையுடன் காங்கிரஸ் உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. […]

You May Like