fbpx

மீன் வியாபாரி சரமாரியாக வெட்டிப் படுகொலை…..! மனைவி படுகாயத்துடன் சிகிச்சை தாம்பரத்தில் பரபரப்பு….!

தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கம் கே.கே.நகர் மேட்டு தருவை சேர்ந்த பார்த்திபன்( 52) இவருடைய மனைவி ஜனகா இருவரும் இணைந்து வண்டலூரை அடுத்துள்ள ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மீன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று காலை காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

இந்த பயங்கர சம்பவத்தில் பார்த்திபன் அதே இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஜனகா படுகாயம் அடைந்தார் அவர்களுடைய அலாரம் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர் அங்கே ஜனகாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஓட்டேரி காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பார்த்திபனின் 15 வயது மகளுக்கு மண்ணிவாக்கம் பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் கைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், ஆகவே கடந்த டிசம்பர் மாதம் பார்த்திபனின் மகள் பிரேம்குமாரை தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பக்கத்தில் வைத்து கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பழி தீர்க்கும் விதத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

முதன்முறையாக வெளியாகியது தனுஷின் வாத்தி திரைப்பட விமர்சனம்…..!

Tue Feb 14 , 2023
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ் அவர் நடித்திருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த விதத்தில் அவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தயாரான இந்த திரைப்படத்தின் […]

You May Like