திருமணம் நடந்தால் உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்பெல்லாம் நினைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. தற்போது இருக்கின்ற இளம் தலைமுறையினரிடையே உடனடியாக குழந்தை பெற்று கொண்டால் அது தம்பதிகளின் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை திருமணமாகி 2 வருடங்கள் வரையில் தள்ளி போடும் வழக்கம் தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே இருந்து வருகிறது.
ஆனால் சரியான சமயத்தில் குழந்தை பேறு பெறாமல் இருந்தாலும் கூட அவர்கள் பல சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.
அந்த வகையில், சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(32). உணவு டெலிவரி பாயாக வேலை பார்த்து வரும் இவர் பெற்றோர் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 3️ தினங்களுக்கு முன்னர் தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ராம்குமார் பெட் சீட்டை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தலையில் பாலீத்தின் கவரால் என கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல, புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது தெருவை சேர்ந்த சக்திவேல்(45), அவருடைய மனைவி துலுக்கானம் (35) தம்பதியர் இருவரும் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று இவர்களின் வீட்டில் சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையிலும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
திருமணம் நடைபெற்று 13 வருடங்களை கடந்த பிறகும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற இயக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.