போன ஒரு மாத காலத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டான காட்டுத்தீ காரணமாக, சற்றேற குறைய 250 ஹெக்டர் வனப்பகுதி சாம்பலாய் போனது. துரதிஷ்டவசமாக இந்த காட்டு தீ அதிக அளவில் விஷமிகளால் பரப்பி விடப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
நரசிம்ம ராஜபுரா தாலுகாவின் சிக்க அக்ரஹாரா மலைத்தொடர் மற்றும் குத்ரேமுக் எல்லை பகுதிகளில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவி இருக்கிறது. சிக்கமகளூரு தாலுகாவில் இருக்கின்ற கிரி முடிகிரே தாலுகாவில் இருக்கின்ற சர்மாடி கட் உள்ளிட்ட பகுதிகளிலும் காட்டுத்தீ பரவத் தொடங்கியது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பகுதிகளில் நிலப்பரப்பு செங்குத்தாக இருப்பதால் காய்ந்த புல்வெளிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக வன பாதுகாவலர் எம் சி சித்தராமப்பா தெரிவிக்கும்போது திறமை மிக்க வனத்துறை ஊழியர்கள் காட்டுத் தீயை தடுக்க தொடர்ந்து, முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த 2 தினங்களாக புதிதாக வேறு எங்கும் காட்டுத்தீ உண்டாகவில்லை என்று கூறினார்.
வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தல், மரங்களை வெட்டிச்செல்லுதல் போன்ற மனிதர்களின் நடவடிக்கையின் காரணமாக, தான் பெரும்பாலான காட்டுத்தை உண்டாகிறது இதை தவிர சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே காடுகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சிக்கமகளூர் மாவட்டத்தில் ஏற்படும் 7 ஆறுகள் மற்றும் சோலா காடுகள் உள்ளிட்டவை இது போன்ற காட்டு தீயினால் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்து இருக்கிறார்.
இயற்கை வளங்களை மனிதர்கள் சேதப்படுத்துவதன் காரணமாக, வனவிலங்குகள் மனிதர்களை தாக்கும் நிலை வரும் நாட்களில் அதிகரிக்கலாம். மக்கள் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்டு வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். துணை ஆணையர் கே என் ரமேஷ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் உள்ளிட்டோர் வனத்துறைக்கு முழுமையான ஆதரவை கூறி இருக்கிறார்கள். ஏதாவது அவசர நிலை உண்டானால் வனத்துறையினருடன் ஒத்துழைக்குமாறு காவல்துறையும் அறிவுறுத்தி இருக்கிறது.
காட்டுத்திலிருந்து சற்று நேரத்தில் லாபகமாக தப்பிய ஒரு அதிகாரி சிகிச்சைக்கு பின்னர் தற்சமயம் குணமடைந்து வருகின்றார். தீயை அணைக்கும்போது வன ஊழியர்களின் 3 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகிப் போயின காவல்துறையினரும் வனத்துறை நிறம் ஒன்றிணைந்து நடத்திய கூட்டு விசாரணையில் பாலேஹொன்னூர் அருகே காட்டுத்தீயை உருவாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து தலைமறைவாக இருக்கின்ற இன்னும் இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.