கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி என்ற தம்பதியினர் ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள்.
இவர்களில் சூலூர் கே.கே.சாமி நகரை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் ரூபாய் 11.80 லட்சம் பணத்தை சீட்டு பணமாக செலுத்தியதாகவும், ஆனால் தான் கட்டிய பணம் எனக்கு திரும்பி கிடைக்கவில்லை என்றும் கோவை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, மேலும் சிலர் இதேபோல புகார்களை வழங்கினர். ஆகவே காவல்துறையை சார்பாக விசாரணை நடத்தப்பட்டதில் 43 பேர் 86 சீட்டு பிரிவுகளில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததும் அவர்கள் கட்டிய பணத்தை அந்த தம்பதியினர் திரும்பி கொடுக்காமல் மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து ரங்கநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் அவருடைய மனைவி சுமதி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அதோடு இந்த மோசடியும் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றன.