fbpx

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி……! அவமானம் தாங்காமல் தீக்குளிப்பு திருவள்ளூர் அருகே சோகம்….!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தான் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூவர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் மாடு மேய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாடு மேய்ப்பதற்காக அவர் சென்றுள்ளார்.

அப்பொழுது அதே பகுதியை சார்ந்த 5 இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த சிறுமியை மிரட்டி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு, இதனை கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீயின் சூடு தாங்காமல் அலறி துடித்த அவருடைய சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிறுமி வழங்கிய புகாரின் அடிப்படையில் கூட்டுப்பலாதகரத்தில் ஈடுபட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கு நடுவே சிறுமியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பியிருக்கிறார். இந்த சூழ்நிலை இருந்தால் திடீரென்று அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கூட்டுபலாத்காரம் செய்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

2️ சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை…..! கரூர் அருகே பரபரப்பு…..!

Sun Mar 5 , 2023
கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்( 43). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.. இவர் […]

You May Like