fbpx

கோவையில் பயங்கரம்…..! ஓடும் பேருந்தில் வாலிபரை சரமாரியாக வெட்டிய கும்பல்…..!

கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புளியங்குளம் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தகராறில் சந்தோஷ் என்பவரை கத்தியால் குத்தியாக சொல்லப்படுகிறது. இதில் சந்தோஷ்குமார் காயம் அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுவே தன்னை கத்தியால் குத்திய கமலேஷை பழிவாங்க சந்தோஷ திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூரில் இருந்து தீத்திபாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசு பேருந்தில் கமலேஷ் சென்று கொண்டிருந்ததை அறிந்து கொண்ட சந்தோஷ் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் 2️ சக்கர வாகனங்களில் அந்த பேருந்தை பின் தொடர்ந்து, வந்து கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது பேருந்துக்குள் சென்று 4 பேரும் இணைந்து கமலேஷை அரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அலறி துடித்தபடி அவர் தப்பி ஓட முயற்சி செய்தார். அதோடு பேருந்தில் இருந்த பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு சில பயணிகள் மட்டும் துணிச்சலுடன் அறிவாளால் வெட்டிய கும்பலை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அதில் மூன்று பேர் தப்பி சென்று விட்டனர்.

சந்தோஷ் மட்டும் பயணிகளிடம் சிக்கிக்கொண்டார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர். காயமடைந்த கமலேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது கோவையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது

Next Post

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

Mon May 8 , 2023
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கவிருந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வழியாக மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கிடையே, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான […]

You May Like