fbpx

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…..! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி வருடத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி மாலை 5 மணி வரையில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நடப்பு கல்வி ஆண்டில் மாறுதல் வேண்டிய விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு வருடம் பணியை முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த வகையை சரியான ஆதாரத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கலந்தாய்வு என்பது தற்போது பணிபுரிய மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் உள்ள காலி இடத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் மற்றும் காலில் பணியிட விவரங்கள் மே மாதம் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

Next Post

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை..!!

Fri Apr 28 , 2023
புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் 2 ஆண்டுகளில் வெறிநாய் கடியால்ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டு வர மாநில செயல் திட்டத்தைசெயல்படுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். இதில், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் […]

You May Like