பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து போன கோபி மது குடித்துவிட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தார். அவரை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியலட்சுமி தான் வீட்டிற்கு அழைத்து வந்து சேர்த்தார். இதன் காரணமாக ராதிகா கடும் கோபத்திற்கு ஆளானார். அதன் பிறகு போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி உள்ளார்.
கோபி தன்னைத் திட்டியதால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறினார். ஆகவே கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சித்தார். இந்த நிலையில், எதிர்வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி தொடரில் நடைபெற உள்ள நிகழ்வுகள் தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் கோபியின் தாய் கோபியிடம் சென்று மீண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என்று அழைக்கிறார். இதனை மறைந்திருந்து கேட்ட ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார். அதன் பிறகு பாக்யாவை சந்திக்கும் ராதிகா மறுபடியும் கோபியுடன் சேர்ந்து வாழ போகிறீர்களா? என்று பாக்யாவை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் இதற்கு பதில் அளித்த பாக்யா நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ராதிகா கடும் கோபத்திற்கு ஆளாகிறார். இனி இந்த தொடரில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.