fbpx

குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பெற்றோர்கள் வெளுத்து வாங்கியதால் பரபரப்பு!

பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் படிப்பதற்காக வரும் மாணவிகளை உடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களோ அல்லது பொது இடங்களில் சமூக விரோதிகளோ பாலியல் ரீதியாக சீண்டினால் ஆசிரியர்களிடம் அது தொடர்பாக தெரிவித்து ஆறுதல் அடையலாம். ஆனால் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டால் யாரிடம் சொல்வது.

சேலம் அருகே சேலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ்பாபு. பள்ளி வளாகத்தில் இவர் தொடர்ச்சியாக ஒழுங்கீன முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக தினந்தோறும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் சுரேஷ்பாபு மாணவிகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுவதாகவும், மாணவியர் கழிப்பிடம் அருகே நின்று கொண்டு புகை பிடிப்பது, மாணவ, மாணவியரை கை, கால்களை பிடித்து விடச் சொல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார் என்று பெற்றோர்களின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் முகரத்பேகத்திடம் புகார் வழங்கியதாகவும், ஆனால் அதனை தலைமை ஆசிரியர் உதாசீனப்படுத்தி விட்டதாகவும், இது தொடர்பாக வீட்டில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து, ஆசிரியர் ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால் மாணவியர்கள் அனைவரும் பெற்றவரிடம் அது தொடர்பாக தெரிவித்ததை தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பாபுவை ஆத்திரத்தின் மிகுதியில் தாக்கி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் குதித்தார்கள்.

இது தொடர்பாக தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுரேஷ்பாபு இன்றும் கூட மதுபோதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது என்று சொல்லப்படுகிறது.

Next Post

இம்ரான் கானின் முன்னாள் மனைவிக்கு திருமணம்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Fri Dec 23 , 2022
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான், தனக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான். 49 வயதாகும் ரெஹம் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, நடிகரும், மாடலுமான மிர்ஸா பிலால் பெய் உடன் தனது திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாகவும், மிர்சாவின் பெற்றோர் மற்றும் எனது மகன் முன்னிலையில், மிக அழகாக […]
இம்ரான் கானின் முன்னாள் மனைவிக்கு திருமணம்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

You May Like