fbpx

சென்னை மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு…..! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த விதத்தில் தென்னிந்தியாவில் சென்னை மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பெங்களூர் வழிதடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தற்சமயம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆதன் அடிப்படையில் வழக்கம்போல காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 7.13 மணி அளவில் சென்றடையும், அங்கிருந்து 7.15 மணியளவில் புறப்பட்டு பகல் 12 20 மணியளவில் மைசூரை சென்றடையும்.

அதேபோல மைசூரில் இருந்து பிற்பகல் 1.05 மணி அளவில் புறப்பட்டு 10 நிமிடங்கள் முன்பாக இரவு 7:20 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். அதோடு இந்த புதிய நேரம் மற்றும் வருகின்ற 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Next Post

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளைமாடு…..! சோகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட உருக்கமான பதிவு….!

Sat May 6 , 2023
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த விதத்தில் சென்ற 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கருப்பு கொம்பன் காளை பங்கேற்றது. இந்த நிலையில், இந்த காலை மாட்டை வாடி வாசலில் இருந்து […]
’சென்னையில் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்’..! சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி

You May Like