fbpx

ஓட ஓட விரட்டி கல்லால் அடித்து கொலை… தாயை கிண்டல் செய்தவரின் உடலை தாயின் காலடியில் போட்ட மகன்..!

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேரந்த சீனு என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மதுபோதையில் கிண்டல் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, அந்த பெண், இந்த சம்பவம் பற்றி தனது மகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன், தனது தாயை பைக்கில் ஏற்றிக் கொண்டு சீனு இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

அவரை பார்த்தவுடன் பயத்தில் சீனு அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தும், விடாமல் அவரை துரத்தி சென்ற அந்த இளைஞர், ஓடஓட விரட்டி கல்லால் அடித்தே கொன்றார். அதிலும், ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர், கொலை செய்யப்பட்ட சீனுவின் உடலை தரதரவென சாலையில் இழுத்து வந்து அவரது தாயின் காலடியில் போட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிழந்த சீனுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை கொண்டு தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rupa

Next Post

அரசு காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; கைது செய்யப்பட்ட நிர்வாகி.. அதிர்ச்சி சம்பவம்..!

Mon Aug 29 , 2022
பீகாரின் முசாபர்பூரில் இயங்கி வந்த அரசு காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட, சம்பவம் சில வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேப்போல மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அங்கு நடந்துள்ளது. மாநில தலைநகர் பாட்னாவில் இருக்கும் அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சிறுமிகள், காப்பக சூப்பிரணடு தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like