தமிழ்நாட்டில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோடு பகுதியில் வணிகர் தின மாநாடு நடைபெற இருப்பதால் தமிழ்நாடு முழுவதிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் நாளை செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், தினசரி சந்தைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் நாளை விடுமுறை வழங்கி இருப்பதால் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் பங்கேற்றுக் கொள்வார்கள் என்று அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் கூறியிருக்கிறார்.
அத்துடன் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மே மாதம் 5ம் தேதி அதாவது, நாளைய தினம் ஈரோடு பகுதியில் வணிகர்கள் தின மாநாடு நடைபெற இருப்பதால், இந்த மாநாட்டிற்கு வியாபாரிகள் எல்லோரும் செல்ல உள்ளதால் நாளை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முழுவதும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.