ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள மின்னல் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சுசிலா எழுவது இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட ஒருவர் சுசிலா சாவியை எங்கு வைத்து செல்கிறார் என்பதை நோட்டமிட்டு அதனை கண்டுபிடித்து பூட்டை திறந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் சுசிலா புகார் வழங்கினார். அதன் பேரில் காவல்துறை ஆய்வாளர் பழனிவேல், காவல்துறை துணை ஆய்வாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பாராஞ்சி கிராமம் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகன்(25) அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(22) சுசிலாவின் வீட்டு கதவை திறந்து வீட்டில் வைத்திருந்த ஏடிஎம் கார்டை திருடியுள்ளனர் என்பது தெரிய வந்தது.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் ஏடிஎம் கார்டிலிருந்து இரு தவணைகளாக 58,000 பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது தொடர்பாக கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்த போது தான் தங்களுடைய ஏடிஎம் கார்டு திருடுபோய் உள்ளது என்பது தெரிந்த து. என சுசிலா தெரிவித்துள்ளார். அத்துடன் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்த சம்பவமே ஏடிஎம்மில் இருந்து பணம் திருடும்போது வந்த குறுஞ்செய்தியின் மூலமாகத்தான் எங்களுக்கு தெரிந்தது என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்வதற்கு சோளிங்கருக்கு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வி ஏற்கனவே அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் சூட்டரை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்கு செல்லாமல் திருட்டையே தொழிலாக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவது இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இவர்கள் வேறு எங்காவது கைவரிசையை காட்டியுள்ளார்களா? என்றும் த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்