கோவை மாவட்டம் இடையார்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு சென்ற ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார்.
இதற்கு நடுவே ரேஷ்மா கர்ப்பமானதை தொடர்ந்து, அவர் தன்னுடைய தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அவருடைய தாய் வீடு கேரளாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி என்பவர் கோட்டாம் பட்டியில் உள்ள தன்னுடைய ஆண் நண்பரான சுஜய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆகவே அங்கே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சுஜய் சுப்புலட்சுமி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக அருகில் இருந்த அவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு சென்று சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற சுஜயை மிக தீவிரமாக தேடி வந்தனர். அதோடு அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சுஜய், ரேஷ்மா தம்பதியினர் திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே சுப்புலட்சுமி உடன் சுஜய் 6 வருடங்களாக பழகி வந்ததும், இதுகுறித்த பிரச்சனைகள் சுஜய் சுப்புலட்சுமியை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்திருப்பதும், அவருடைய மனைவி ரேஷ்மாவும், அதற்கு உடந்தையாக இருந்ததும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் இருக்கின்ற தன்னுடைய மாமியார் வீட்டில் சுஜய் பதுங்கி இருந்தது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா விரைந்த தனிப்படை காவல்துறையினர் சுஜய் மற்றும் அவருடைய மனைவி ரேஷ்மா உள்ளிட்ட இருவரையும் காவல்துறை கைது செய்தது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுஜய் மற்றும் அவருடைய மனைவி ரேஷ்மா அவளிட்ட இருவரும் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று தெரிவித்திருக்கின்றன. இதனால் காவல்துறையினர் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். இதற்கு நடுவே கொலை செய்தவர் விஜய்யின் மனைவி ரேஷ்மா என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.