தற்காலத்து இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பிறகும் பெண் கிடைக்காமல் பாடாய் படுகிறார்கள்.குறிப்பாக 90ஸ் கிட்ஸ் பெண் கிடைக்கவில்லை என்று வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.மற்றபடி 90ஸ் கிட்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஆனால் இவர்கள் பெண்களைக்காமல் ஒருபுறம் துன்பத்தை அனுபவித்து வந்தாலும், மறுபுறம் பெண் கிடைத்து திருமணம் நடைபெற்ற நபர்களோ, அந்த திருமண வாழ்க்கையை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர்.
பெண் கிடைக்காமல் ஒரு சாரார் துன்பப்பட்டால், பெண் கிடைத்து திருமணம் நடைபெற்று சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு சிலர் தங்களுடைய பேராசைகளால் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், பெரம்பலூரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கும், அதே ஊரைச் சேர்ந்த விமல் (31) என்ற நபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி திருமணம் நடந்தது இந்த நிலையில், விமல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் வசைபடுவதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் புகார் வழங்கினார்.
மேலும் அந்தப் புகாரில் தான் கருப்பாக உள்ளதால் தன்னுடன் வாழ விருப்பமில்லை எனவும், அவ்வாறு தனுடன் வாழ வேண்டுமென்றால், 50 சவரன் நகை வரதட்சணையாக உன்னுடைய தாய் வீட்டிலிருந்து வாங்கி வர வேண்டும் என்று தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அந்த புகாரில் அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.
விமலின் மிரட்டலுக்கு துணை போன அவருடைய தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, சகோதரி மீனா, சகோதரியின் கணவர் சிவா உள்ளிட்ட 4 பேர் மீதும் அந்த பெண் புகார் வழங்கியிருந்தார்.
அதோடு, மட்டுமல்லாமல் விமலின் கைபேசியை பார்த்தபோது அதில் விமல் பல பெண்களுடன் தகாத முறையில் உறவு வைத்துக் கொண்டிருந்ததும் அப்படி உறவு வைத்துக் கொண்டதை வீடியோவாக எடுத்து அதனை காட்டி, அவர்களை மிரட்டி, பணம் பறித்து வருவதாகவும், அதோடு தன்னுடன் தனிமையில் இருந்த சமயத்தில், அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் அந்த புகாரில் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விமலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக இருந்த விமலின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது