சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (20). இவர், சில வருடங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு வந்தார். அப்போது பாலியல் தொழில் செய்யும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது இதனால் அவருடன் சேர்ந்து கோபாலகிருஷ்ணனும் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதிகளில் பாலியல் தொழில் செய்யும் சல்மான் என்பவருடன் கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட பழக்கத்தால், அவருடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வந்தார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விட்டு பிரிந்தார் கோபாலகிருஷ்ணன். இந்நிலையில் சல்மானும், கோபாலகிருஷ்ணனும் தனித்தனியாக பிரிந்து, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்தனர். மேலும், சல்மான் வண்டலூர் அருகே கண்டிகையில் ஜூஸ் கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், சல்மானின் ஜூஸ் கடைக்கு சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் வந்துள்ளார். சல்மானை பார்த்தவுடன், பல காலத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதால், பழைய சம்பவங்களை பேசிக்கொண்டனர். அப்பொழுது சல்மான், கோபாலகிருஷ்ணனிடம் தனியாக ஏன் தொழில் செய்கிறாய் என்னுடன் வந்து விடு, உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார் அதற்கு கோபாலகிருஷ்ணன் சம்மதிக்கவில்லை. இது சல்மானுக்கு ஆத்திரத்த ஏற்படுத்தியத. இதனால் சல்மான் ஒரு திட்டம் போட்டார் தனக்கு போட்டியாக இருக்கும் கோபாலகிருஷ்ணனை, ஒன்று தன்னுடன் எப்படியாவது சேர்த்து தொழில் செய்வது அல்லது அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நண்பர்களான ராபின், சுரேஷ் ஆகியோர் மூலமாக கோபாலகிருஷ்ணனை கடத்தி வந்து, ஊரப்பாக்கம் ராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்டும் முடிவில் தனது நண்பர்களான லிபியின், அகில் ஆகியோரை காவலுக்கு வைத்துவிட்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வர சல்மான், சுரேஷ் இரண்டு பேரும் சென்றனர். கோபாலகிருஷ்ணன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜன்னலில் வழியாக கத்தி கூப்பாடு போட்டார். திடீரென அந்த வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூட்டமாக கூடிவிட்டனர். உடனே அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராபின், லிபின், அகில் மூன்று பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து, கோபாலகிருஷ்ணனை மீட்டு விசாரணை நடத்தினார். பிறகு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ராபின், லிபின், அகில் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ராஜபடுத்தி சிறையில் அடைத்தனர். சல்மானை தேடி வருகின்றனர்.