fbpx

ஜல்லிக்கட்டு வீரர் படுகொலையில் வெளியான உண்மை….!

ஒருவர் முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக என்றாவது ஒருநாள் அவருக்கு மிகப்பெரிய துன்பத்தை விளைவிக்கும் என்பதை பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, உள்ள கல்குவாரி ஒன்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் உடலை மீட்டனர். கை, கால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்ததால் நடைபெற்று இருப்பது கொலைதான் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கேயம் என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே அந்த நபர் கபடி வீரராக தான் இருப்பார் என்று சந்தேகப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தூரிதப்படுத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சியை சார்ந்த மாடுபிடி வீரர் மணி(23) என்பது தெரியவந்தது. இந்த கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட அடுத்த கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதில் கருங்குளத்தை சார்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும், கரூரைச் சார்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்திருக்கிறது. அந்த பெண்ணுடன் மணியம் நெருங்கி பழகி வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. ஆகவே இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் மணி வேலையில்லாமல் இருந்திருக்கிறார். ஆகவே அவருக்கு வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து குஜிலியம்பாறைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஒரு சிலர் அதன் பிறகு அங்கே தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மணியை அடித்து உடலில் கல்லை கட்டி, கை கால்களையும் சேர்த்து கட்டி வாரியில் வீசி சென்றது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ஒரு பெண் உட்பட 4️ பேரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

ஆன்லைனில் இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் விபச்சார கும்பல்..!! உஷாரா இருங்க..!! பணம் பறிபோகும்..!!

Sun Feb 12 , 2023
சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல் பகுதிகளில் சமீபகாலமாக விபச்சார தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. முன்பெல்லாம் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கென புரோக்கர்களை வைத்திருப்பார்கள். அந்த புரோக்கர்கள் தான் நேரடியாக சென்று, பார்ட்டிகளை அழைத்து வருவர். ஆனால், தற்போது விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கென்று புரோக்கர்கள் யாரையும் வைத்துக் கொள்ளாமல், ஆன்லைன் மூலம் தங்களது செல்போன் எண் மற்றும் லோக்கேஷனை வெளிப்படையாக தெரியப்படுத்தி, இளைஞர்களின் ஆசையை தூண்டிவிடுகின்றனர். இதில், […]

You May Like