கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் இருந்து வெளியேற முயற்சித்தாலும் ஒரு சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள்.
அப்படி ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் அருகே சோழவரம் அடுத்துள்ள ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற விகாரைச் சார்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துவர்க்காபர் என்ற நபரும் வேலை பார்த்து வந்தார். துவர்க்காபாருக்கு சுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில் தான் சுமிதாவுக்கும்,குட்டுலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலராக மாறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு பணி முடிவடைந்து வீட்டிற்கு வந்த துவர்காப்பர் தன்னுடைய மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பாக்கத்தில் விசாரித்திருக்கிறார்.
அப்போது அவர்கள் புற்றுநோய் வீட்டிற்கு சென்றதாக தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமிதாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த குழந்தைகள் சிவா(4), ரீமா(1) உள்ளிட்ட 2️ சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குட்டுலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்