கோயமுத்தூர் மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (33) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருடைய நண்பரான மதன்ராஜ் (32) என்பதற்கும் ஜெகன்ராஜின் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக, ஜெகன் ராஜுவுக்கும், மதன்ராஜுவுக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார் அப்போது ஆத்திரம் கொண்ட மதன்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வந்து ஜெகன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதன் பிறகும் ஆத்திரம் அடங்காத மதன்ராஜ் ஜெகன் ராஜை கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன்பிறகு இந்த கொலையை மறைப்பதற்கு முடிவு செய்த அவர், ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அதில் ஜகன் ராஜின் உடலை ஏற்றிக்கொண்டு வீரகேரளம் பகுதியில் இருக்கின்ற டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள மயானத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அந்தப் பகுதி பொதுமக்களிடம் மதன்ராஜ் வசமாக சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜெகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மதன்ராஜிடம் காவல்துறையினர் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.