fbpx

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி….!

முறை தவறையே உறவு என்பது அனைத்து வீட்டிலும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.

அப்படி முறை தவறிய உறவில் இருப்பதற்கு அந்த உறவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் பல நடவடிக்கைகள் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்த நகர் பகுதியில் இருக்கின்ற சாக்கடையும் கருவி நீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பெரிய பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது சதீஷ் பால் (42) என்ற நபர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய மனைவியிடம் அதிரடி விசாரணையை தொடங்கினர் அந்த விசாரணையில், சதீஷ்பால் மனைவி நீதுவுக்கும், ஹெர்பால் என்பவருக்கும் இடையே முறை தவறிய உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. இதனையறிந்து கொண்ட சதீஷ் பால் மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆகவே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த சதீஷ்பாலை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் இருவரும் திட்டமிட்டனர்.

குடிப்பழக்கம் உள்ள சதீஷ் பாலுக்கு கடந்த 1ம் தேதி மதுவிரு போதை மாத்திரை கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.

அதன் பிறகு சதீஷ் பாலின் கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்கடை கால்வாய் தொட்டியில் அவருடைய சடலத்தை மறைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது இந்த சம்பவம் குறித்து மனைவி நீதுவும், ஹெர்பாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Next Post

அடுத்த சோகம்..!! மஞ்சுவிரட்டை காண வந்த பார்வையாளர் காளை முட்டியதில் பலி..!!

Tue Jan 17 , 2023
புதுக்கோட்டை அருகே மஞ்சு விரட்டை காண வந்த பார்வையாளரை காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் அரசு அனுமதி பெற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வந்தது. இதில், ஏராளமான பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர். இந்நிலையில், சிவகங்கை புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (50) […]

You May Like