முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள்.
அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் பெரிய மேடு ஆர் எம் சாலையில் இருக்கின்ற விடுதி ஒன்றில் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அறையில் இருந்தபோது திடீரென்று பிரியா அலறியபடி வெளியே ஓடி வந்தார். மேலும் அவர் விடுதியின் மேலாளரிடம் என்னுடன் அந்த நபர் திடீரென்று அதிக அளவு மது குடித்ததால் மயங்கி விழுந்து விட்டதாக கதறியபடி தெரிவித்திருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான விடுதியின் மேலாளர் அறைக்கு சென்று பார்த்த போது சுயநினைவு இல்லாமல் பிரகாஷ் உயிரிழந்து கிடந்தார். அதோடு, இந்த சம்பவம் குறித்து பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சடலமாக கிடந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இந்த வழக்கை காவல்துறையினர் சந்தேக மரணம் வழக்கு என்று பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு நடுவே பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதன் மூலமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கள்ளக்காதலி பிரியாவிடம் காவல்துறையினர் தங்களுடைய பணியில் அதிரடி விசாரணை நடத்தியதில் பல உண்மை வெளியானது. அதாவது இந்த சம்பவம் நடைபெற்றபோது பிரகாசும், பிரியாவும் மதுவின் போதையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் கள்ளக்காதலி பிரகாஷை தாக்கி இருக்கிறார். அதனை மறைப்பதற்கு அவர் நாடகமடி இருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆகவே காவல்துறையினர் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்