ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தன்னுடைய தந்தை சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட்டனர். அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய உறவினர் சரோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தின் முடிவில் கத்தியை வைத்து சரோஜை அருண் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சரோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சரோஜின் உடலை மார்பில், கல் அறுக்கும் இயந்திரத்தை வைத்து 10 துண்டுகளாக வெட்டி, அதனை பாக்கெட் மற்றும் சூட்கேசுகளில் அடைத்து ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் வீசி உள்ளார். அதன் பிறகு காவல்துறையினரிடம் தன்னுடைய உறவினர் காணாமல் போய்விட்டார் என்று புகார் வழங்கி மற்றவர்களுடன் சேர்ந்து அவரை தேடி உள்ளார்.
ஆனாலும் காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் அருணின் தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவை முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை கண்காணித்த காவல்துறையின,ர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். பிறகு தன்னுடைய உறவினரை கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அருணை கைது செய்து காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.