நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒய்ட் வாஷ் செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகின்றது. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழி நடத்துகிறார். இஷான் கிஷன் சுப்மன்கில் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குகிறார்கள்.
ப்ரீத்திவிஷா அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு விளையாட இடம் கிடைக்குமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. காயம் காரணமாக, டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருக்கிறார். ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துவிட்ட நிலையில், டி20 போட்டியில் ஆவது வெற்றி பெறலாம் என்று நியூசிலாந்து அணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு நாள் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சாளர் முகமது சமி ,முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில் பல வீரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.