தமிழ்நாடு முழுவதும் கொலை நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அதிலும், சமீப காலமாக பாஜக என்று சொன்னாலே தமிழ்நாடு முழுவதும் ஒருவித பயம் ஏற்பட்டு வருகிறது.அதாவது, பாஜக மெல்ல, மெல்ல தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்த வேளையில், பாஜகவின் கொள்கையை பின்பற்றும் கட்சிகளின் பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது.
ஒருபுறம் பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்கு தமிழகத்தில் என்னதான் வழி என்று ஒரு சாரார் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். மறுபுறம் அனைத்தையும் சமாளித்து தமிழகத்தில் தன்னுடைய அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறது பாஜக.
மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40) இவர் ஜெய் ஹிந்த் புரம் அருகே உள்ள எம்கேபுரத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு இவர் இந்து மக்கள் கட்சியில் தென் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார் இந்த சூழ்நிலையில், நேற்று இரவு கடை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த 2 பேர் கொண்ட மர்ம கும்பல் கல் மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றால் அவரை கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக வைக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ஜெய்ஹிந்த் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா ?என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து ஜெய்ஹிந்த் புரத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.