சமீப காலமாக கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பலர் யோசித்துச் செய்யும் பல விசித்திரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.. விதவிதமாக யோசித்து கொலை செய்து அந்த கொலையை மறைப்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்களேன்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின பெண் ரூபிகா என்பவருக்கும், அந்த பகுதியில் வசித்து வரும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அன்சாரிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ரூபிகாவை சென்ற பதினைந்து நாட்களுக்கு முன்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் அன்சாரி.
இந்த சூழ்நிலையில்தான் ரூபிகா கடந்த சில தினங்களாக காணாமல் போய் இருக்கிறார். ஆகவே ரூபிகாவின் பெற்றோர் தங்களுடைய பெண்ணை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து இந்த பெண்ணின் வீட்டருகே நாய்கள் எலும்புகளை கடித்து சாப்பிட்டு கொண்டு இருந்ததை அந்த பகுதி மக்கள் சந்தேக கண்ணுடன் பார்த்திருக்கிறார்கள்.
அந்த எலும்புகள் மனித எலும்புகளை போல இருந்த சூழ்நிலையில் அந்த பகுதி மக்கள் காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் வழங்கிருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எலும்புகளை மீட்டெடுத்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனைகள் அங்கே பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்ட ரூபிகாவின் உடலை கண்டெடுத்தனர். பழங்குடியின பெண் ரூபிகாவை அன்சாரி கொலை செய்ததும், அவருடைய மனைவியை கொலை செய்து 18 துண்டுகளாக வெட்டி சிதைத்து இருந்ததும், விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்து காவல் துறையினர் சிறையிலடைத்துள்ளனர். அதோடு ரூபிகாவின் தொலைந்து போன உடல் பாகங்களை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.