ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திராராம். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் மம்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு ஆரியன்குமார் மற்றும் யஷ்ராஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே நீண்ட தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததா கூறப்படுகிறது இத்தகைய நிலையில் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர் தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதோட தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து மனைவி மம்தாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். விஜேந்திரா அதன்படி கடந்த புதன்கிழமை அன்று தன்னுடைய வீட்டில் வைத்தே மனைவியை கொலை செய்து இருக்கிறார். இந்த கொலையை அவருடைய குழந்தைகள் இருவரும் பார்த்து அழுத்த தொடங்கினார்கள் ஆகவே நாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தன்னுடைய இரு குழந்தைகளையும் கொலை செய்த அவர் மூவரின் உடலையும் காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து ஏறித்துள்ளார்.
அடுத்த நாள் காலை அந்த பகுதிக்கு வந்த உள்ளூர் வாசிகள் கருகிய நிலையில் கிடந்த 3 உடல்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைகள் உண்மை அம்பலமானது. இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான விஜேந்திரா அவருடைய தந்தை, தாய் மற்றும் சகோதரி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்