தற்காலத்து இளம் பெண்கள் மற்றும் இளம் தலைமுறை முந்தைய தலைமுறையினரை போல அல்லாமல் ஆண், பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரும், எல்லோரிடமும் நட்பாக பேசி, பழகி வருகிறார்கள்.
இதில் ஒரு சிலருக்கு இப்படி என்னதான் நட்பாக பேசி, பழகி வந்தாலும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது.
ஆனால் காதல் என்பது இருபுறமுமே இருக்க வேண்டும். ஒருவருக்கு அவர் மீது காதல் ஏற்பட்டு இன்னொருவருக்கு அந்த உணர்வு இல்லை என்றால் அவரை விட்டு விலகிச் செல்வதுதான் மனிதப் பண்பு.
ஆனால் அதனை தற்போதைய இளைஞர்கள் பெரிதாக கடைபிடிப்பதில்லை.
அந்த வகையில், டெல்லியை சேர்ந்த திருமணமான மம்தா தேவி என்ற பெண்ணுக்கும் அர்மான் கான் என்ற நபருக்கும் பல வருடங்களாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு நடுவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அர்மான் கானுடன் பேசுவதை மம்தா தேவி தவிர்த்து வந்துள்ளார் ஆனாலும் அர்மான் கான் தொடர்ச்சியாக அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததால் டெல்லியிலிருக்கும் தன்னுடைய சகோதரி ஜெயா வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி வருகை தந்துள்ளார்.
இவர் டெல்லியை சார்ந்தவர் தான் என்றாலும் கூட ஜார்கண்ட் மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில்தான் இவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் நேற்று ஜெயாவும், அவருடைய கணவர் நிகில் குஷ்வாகாவும் தேவியை வீட்டிலேயே இருக்குமாறு தெரிவித்துவிட்டு, மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்கள். இதனை தொடர்ந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது, தேவி ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்திருக்கிறார். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக, ஜெயா டெல்லி காவல்துறையிடம் புகார் வழங்கினார். அந்த புகாரில் அர்மான் கான் தன்னுடைய சகோதரிக்கு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.
என்னை கைபேசியில் அழைத்து தேவியை டெல்லிக்கு அனுப்புமாறு வற்புறுத்தினார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். தற்போது அவர் தேவியை கொலை செய்துவிட்டார்.
அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நடுவே அர்மான் கான் தலைமறைவாகிவிட்டார்.