இப்பொழுதெல்லாம் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் பல திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது வெளியில் தெரியாத வகையில் அனைத்தும் நன்றாகத்தான் செல்கிறது. வெளியில் தெரிந்த பிறகு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, என்ன ஒரு மாற்றம் என்றால் ஆண்களை போல இது போன்ற முறை தவறிய உறவு வெளியில் தெரிந்தால் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிவதில்லை.
அதுவே ஒரு ஆண்மகன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தால் அது வெளியே தெரிய வந்தவுடன் கொஞ்சம் அதட்டலாக பேசினாலும் பின்பு ஆண்கள் என்றால் அப்படித்தான் என்று பெண்கள் உணர்ந்து சென்று விடுகிறார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செல்வதில்லை.
கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த டெம்போ ஓட்டுனரான எபனேசர் என்பவரை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெபபிரின்ஸா என்ற பெண் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். எபனேசர், ஜெபபிரன்ஸா தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், கணவருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குழந்தைகளுடன் தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் ஜெபபிரின்ஸாஅதோடு திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு பியூட்டி பார்லரில் கடந்த நான்கு மாதங்களாக பகுதி நேர ஊழியராக பணியாற்றியதுடன் பியூட்டிஷியன் படிப்பையும் அவர் படித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் ஆற்றின் கரையோர சாலையில் சென்ற வியாழக்கிழமை இரவு ஜெபபிரின்ஸா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார். இது தொடர்பான தகவல் அறிந்ததன் பேரில் தக்கலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்ததாவது, தாய் வீட்டில் இருந்து ஜபபிரின்ஸா கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அவருடைய தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில், தன்னுடைய மகள் மாடன் உடை அணிந்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவதால் தன்னுடைய கணவருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் அவர் கணவர் எபனேசர் தன்னுடைய மகளை கொலை செய்திருப்பதாக தந்தை ஜபசிங் தக்கலை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் எபனேசரை கைது செய்ய ஆயத்தமானார்கள். ஆனால் காவல்துறையினருக்கு பயந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இந்த சூழ்நிலையில், மார்த்தாண்டத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் எபனேசரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தெரிவித்ததாவது, என்னுடைய மனைவி தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்றார். அதோடு பியூட்டிஷியன் படிப்பிற்கும் சென்று வந்தார். அங்கே சில ஆண் நண்பர்களுடன் அவர் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். நாள்தோறும் மேக்கப், டைட் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து காலையில் வேலைக்கு செல்லும் அவர் ஆண் நண்பர்களுடன் கடற்கரை, பார்க் என்று டேட்டிங் செல்வதுடன் இரவு வீடு திரும்பியதாக கூறியிருக்கிறார் எபனேசர்.
பின்பு இரவு வீட்டிற்கு வந்த பின்னரும் தனி அறையில் இருக்கும் தன்னுடைய மனைவி தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து சாட்டிங் செய்து வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே தன்னை படுக்கை அறையில் அவர் அனுமதிக்கவில்லை என்றும் எபனேசரை குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இதனால் சந்தேகமடைந்த தான் அவருடைய செல்போனை ரகசியமாக எடுத்து பார்த்தபோது, அதில் ஆண் நண்பர்களுடன் தன்னுடைய மனைவி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மனைவியை அழைத்து கண்டித்ததாகவும், ஆனாலும் அவர் ஆண் நண்பர்களுடனான தொடர்பை கைவிடாததால் அவர் அவமானத்திற்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் மனைவியை அவருடைய தாய் வீட்டிற்கு சென்று இரவோடு, இரவாக இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அதன் பிறகு தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார் எபனேசர்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் தான் எபனேசர் மனைவியை கொலை செய்வதற்கு முன்னர் எழுதி வைத்த 11 பக்க கடிதம், அவர் வெளியிட்ட வீடியோ, மனைவி ஜெபப்ரன்சா ஆண் நண்பர்களுடன் whatsapp செயலில் செய்த சாட்டிங் போட்டோக்களும் தற்சமயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.