கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(50). இவருடைய மகள் ரம்யா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற நபருக்கும் இரு வீட்டு உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுமணப்பெண் ரம்யா தன்னுடைய கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்விற்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த சமயத்தில் வீட்டில் இருந்த தனி அறை ஒன்றில் ரம்யா தூக்கிட்டு உள்ளார். வெகு நேரம் ஆன பிறகும் ரம்யா வெளியே வராததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரம்யா பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன உறவினர்கள் இது தொடர்பாக மாயனூர் காவல் நிலையத்திற்கு ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றன.
திருமணம் நடந்து மூன்றே தினத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சந்தேகத்தையும், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்துகிறது.