fbpx

கள்ளக்காதலன் மேல் வந்த மயக்கம் காரணமாக கணவனை நெருங்க விடாத மனைவி…..! ஏக்கத்தில் இருந்த கணவன் இறுதியில் நடந்த பயங்கரம்…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி எரிந்து நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் எரித்து கொலை செய்யப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் (43) என்பவர் தான் என்று தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. இதற்கு நடுவே சந்தேகத்தின் அடிப்படையில், உயிரிழந்த பிரகாஷின் மனைவி லட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் லட்சுமியின் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை அவர்தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

காவல்துறையிடம் லட்சுமி வழங்கிய வாக்குமூலத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய பள்ளி நண்பரான சின்னராஜ் உடன் எனக்கு வெகு நாட்களாக முறை தவறிய தொடர்பு இருந்து வந்தது. ஆகவே தனிமையில் அடிக்கடி இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இதன் காரணமாக, கணவருடன் எனக்கு நெருக்கமாக இருக்க பிடிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய கணவர் பிரகாஷ் போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்று கூறியுள்ளார் லட்சுமி.

அதேபோல கடந்த மார்ச் மாதம் தனக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதால் ஆத்திரமடைந்த அவர், கணவரை கட்டையால் அடித்துள்ளார். இதில் கணவர் பிரகாஷ் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு காதலன் சின்னராஜ் உடன் இணைந்து கணவர் சடலத்தை வேனில் எடுத்துச் சென்று சானமாவு காட்டில் தீ வைத்து எரித்து விட்டால் காவல்துறையிடம் இருந்து தப்பித்து விடலாம் என கள்ளக்காதல் ஜோடி நினைத்திருக்கிறது.

ஆனாலும் காவல்துறையினர் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் லட்சுமியும் அவருடைய கள்ளக்காதலன் சின்னராஜும் மாட்டிக் கொண்டனர். ஆகவே இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

ரூ.60,000 ஊதியம்...! BEL நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கலாம்…!

Fri May 19 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Manager / Manager (Civil) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். […]

You May Like