கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தன் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கந்தன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இத்தகைய நிலையில், கந்தனின் மனைவி சந்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. ஆகவே இருவரும் அடிக்க டி கட்டு உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கந்தன், மனைவியின் கைபேசியை ஆய்வு செய்து இருக்கிறார். அதில் சிவசக்தியும், சந்தியாகும் அவ்வப்போது செல்போனில் உரையாடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான கந்தன் மனைவியை கடுமையாக கண்டித்து இருக்கிறார். ஆனாலும் இதனை கண்டு கொள்ளாத சந்தியா சிவசக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், நேற்று முன்தினம் கந்தன் தான் வேலைக்கு போவதாக தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார். வழக்கம் போல கணவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டிற்கு வா என்று சந்தியா சிவசக்தியை அழைத்து இருக்கிறார், கள்ளக்காதலர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.
இருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரவு 11 மணியளவில் கந்தன் வீடு திரும்பி இருக்கிறார். இருவரும் ஒன்றாக வீட்டில் இருப்பதை பார்த்த கந்தனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. உடனே சந்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வாக்குவாதம் முற்றியதால் சந்தியாகும் சிவ சக்தியும் சேர்ந்து கந்தனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பலமாக அவர் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு சந்தியா இது தொடர்பாக கம்பனின் நண்பர் வசந்த் என்பவருக்கு போன் செய்து தன்னுடைய கணவர் வழுக்கி விழுந்து விட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக, சம்பவ இடத்திற்கு விரைந்த கந்தனின் நண்பர் வசந்த் கந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே கந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ந்து போன வசந்த் நண்பனின் மனைவியுடன் சக்தி இருப்பதை பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையில் புகார் வழங்கினார்.
இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.