fbpx

ஜாமீனுக்கு இடையூறாக இருந்த நபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த நண்பர்கள்…..!

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும் இது போன்ற நடைமுறைகள் குறைந்தபாடில்லை.

கடந்த 2019 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் என்பவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டார்கள் இதனை அடுத்து ராஜேஷ் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.ராஜேஷ் கடந்த 3 வருடங்களாக ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வர முயற்சி செய்தார் ஆனாலும் அவரால் வெளியே வர முடியவில்லை.

இந்த நிலையில், தூத்துக்குடி சோரீஸ்புரம் தகுதியை சேர்ந்த முத்துக்குமார் (36) என்றவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பைனான்ஸ் கம்பெனி மற்றும் அடகு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

வழக்கம்போல நேற்று மதியம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அவர் காரில் வந்திருக்கிறார். அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அந்த பகுதிக்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த சம்பளத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார். இதனை தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் விசாரணையில் சிவக்குமார் கொலை வழக்கில் கோவை சிறையில் இருக்கும் ராஜேஷ் அவர்களை ஜாமினில் வெளிவரவிடாமல் தடுத்தது முத்துக்குமார் தான் என்பதும், இதன் காரணமாக ராஜேஷின் நண்பர்கள் முத்துக்குமாரை கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்திருக்கிறது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்.. கலக்கத்தில் ஊழியர்கள்..

Thu Feb 23 , 2023
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான […]

You May Like